செங்கோட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது


செங்கோட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2021 4:34 AM IST (Updated: 17 March 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் ஆரியங்காவில் கேரள மாநில சோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர்கள் அனிஷா, ரிச்சார்ட் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சாலு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு மினிலாரி வேகமாக வந்தது. போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். மினிலாரியின் முன்பக்கத்தில் உள்ள என்ஜின் பகுதியில் 3 கிலோ 700 கிராம் கஞ்சா பார்சல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து மினிலாரியில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளா மாநிலம் புனலூரை சேர்ந்த ஷானவாக் (வயது 34), அப்துல் (25), அனல் ஜோர்ஜ் (27) என்பதும், இவர்கள் திண்டுக்கல்லில் இருந்து கஞ்சாவை கடத்திச்சென்று கேரளாவில் பல இடங்களில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story