வல்லக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து
வல்லக்கோட்டை அருகே செல்லும் போது நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது மோதி முன்னால் சென்ற கார் மீது மோதியது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து நேற்று சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் சரக்கு வேன் இரும்பு கம்பி போன்றவற்றை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. வேன் வல்லக்கோட்டை அருகே செல்லும் போது நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது மோதி முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இரும்பு கம்பி சாலையில் சரிந்தது. இதில் காரில் இருந்தவர் மற்றும் வேன் டிரைவர் காயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக அங்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரகடம் போலீசார் விசாரணை செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
Related Tags :
Next Story