தொகுதி தேர்தல் அலுவலகங்களில் தமிழ் பெயர் பட்டியலுடன் சின்னங்கள் இல்லாமல் சுயேச்சைகள் தவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சட்டசபை தொகுதி வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில், தமிழ் பெயர் பட்டியலுடன் சின்னங்கள் இல்லாமல் சுயேச்சைகள் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சட்டசபை தொகுதி வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில், தமிழ் பெயர் பட்டியலுடன் சின்னங்கள் இல்லாமல் சுயேச்சைகள் தவித்து வருகின்றனர்.
வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, சின்னங்களை தேர்வு செய்து குறிப்பிட்டு தாக்கல் செய்வார்கள். இதற்காக தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி சின்னங்கள் மற்றும் சுயேச்சை சின்னங்களை வெளியிட்டு உள்ளது. ஆனால் அந்த சின்னங்களின் படங்கள் அடங்கிய பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.
சுயேச்சைகள் தவிப்பு
அதே போன்று தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலங்களில் சின்னங்களின் ஆங்கில பெயர் பட்டியல் மட்டும் வேட்பாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ் பெயர் பட்டியல் இல்லாததால் சுயேச்சை வேட்பாளர்கள் சின்னங்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story