விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2021 10:31 PM IST (Updated: 17 March 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

பேரையூரில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பேரையூர்,

வில்லூர் அருகே உள்ள எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 49). இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லையாம்.
சம்பவத்தன்று ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வில்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story