கல்லூரி முதல்வருக்கு கொரோனா


கல்லூரி முதல்வருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 March 2021 6:23 PM GMT (Updated: 17 March 2021 6:23 PM GMT)

கல்லூரி முதல்வருக்கு கொரோனா

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேராசிரியர்கள் உள்பட 50 பேருக்கு பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது
பரிசோதனை 
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் 10 பேர் வரை பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். எனவே கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருபவர்களுக்கு எல்லை பகுதியில் 3 இடங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் அனைத்து மக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
முதல்வருக்கு கொரோனா 
இந்த நிலையில் நாகர்கோவிலில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர் சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லூரி முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அக்கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேற்று முன்தினம் மாலை கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 50 பேரிடம் இருந்து மாதிரி எடுக்கப்பட்டது.
கிருமி நாசினி தெளிப்பு
மேலும் முதல்வர் அறை, வகுப்பறைகள், கல்லூரி வளாகம் முழுவதும் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியானது மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித் உத்தரவின்பேரில் மாநகர் நல அதிகாரி கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் நடந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது வகுப்பில் படித்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனாலும் சில நாட்களுக்கு பிறகு கல்லூரி முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு எப்படி தொற்று பரவியது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கல்லூரி முதல்வருக்கு தொற்று பாதித்தது நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story