துப்புரவு தொழிலாளி தற்கொலை


துப்புரவு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2021 6:36 PM GMT (Updated: 17 March 2021 6:36 PM GMT)

துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 31). துப்புரவு தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி வள்ளி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்த அய்யப்பன் திடீரென வாந்தி எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டு அய்யப்பன் அவதி அடைந்து வந்தார். இந்தநிலையில் திடீரென அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்ேதாணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story