குடும்பத் தகராறில் கணவன்-மனைவி தற்கொலை


குடும்பத் தகராறில் கணவன்-மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2021 1:14 AM IST (Updated: 18 March 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர் அருகே குடும்பத் தகராறில் கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கீழப்பழுவூர்
கணவர் தற்கொலை
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன் (வயது 42). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (36). இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
 கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. நேற்று காலையும் அவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டைவிட்டு வெளியேறிய கருப்பையன்  குடிபோதையில் பூச்சிக் கொல்லி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்டார்
 இதை கேள்விப்பட்ட பரிமளாவும், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீ்ட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 குடும்ப தகராறில் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story