சங்காயம் ஏற்றுமதி தீவிரம்


சங்காயம் ஏற்றுமதி தீவிரம்
x
தினத்தந்தி 18 March 2021 1:57 AM IST (Updated: 18 March 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் சங்காயம் ஏற்றுமதி தீவிரமடைந்துள்ளது. இந்த சங்காயம் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் சங்காயம் ஏற்றுமதி தீவிரமடைந்துள்ளது. இந்த சங்காயம் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
உலரவைக்கும் பணி தீவிரம்
சங்காயம் என்பது வலையில் பிடிபடக்கூடிய கறிக்கு உதவாத நண்டு மற்றும்   மீன்களை வெயிலில் உலரவைத்து எடுக்கப்படும் பொடிக்கருவாடு ஆகும். இது கோழித்தீவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த சங்காயம் நாமக்கல் மற்றும் தூத்துக்குடி பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதால் சங்காயத்தை உலரவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உலரவைக்கப்பட்ட சங்காயம் ஏற்றுமதி செய்ய சாக்குமூட்டையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 
ஏற்றுமதி 
இதுபற்றி சங்காயம் தொழிலாளர்கள் கூறுகையில், அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் வலையில் சிறிய வகை நண்டுகள், சிறிய வகை மீன்கள் சிக்குகின்றன. இவை அனைத்தும் கறிக்கு உதவாததால் மீனவர்கள் வலையிலிருந்து மீன்களை அகற்றும் போது கடற்கரை துறைமுகயோரத்தில் கொட்டி வைக்கின்றனர். 
தற்போது வெயில் சுட்டெரித்து  வருவதால் கொட்டி வைக்கப்பட்ட மீன்கள் காய்ந்து உள்ளன. இந்த சங்காயத்தை நாங்கள் சாக்கில் மூட்டையாக கட்டி கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றனர். 

Next Story