வாக்குப்பதிவை கண்காணித்திட நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி


வாக்குப்பதிவை கண்காணித்திட  நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 17 March 2021 8:55 PM GMT (Updated: 17 March 2021 8:55 PM GMT)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணித்திட நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணித்திட நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.
 
திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமானவையாக 154 வாக்குசாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு வாக்குபதிவை நேரடியாக கண்காணித்திட நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கலெக்டர் சிவன்அருள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,371 வாக்குச்சாவடி மையங்களில் 154 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளன. 

இந்த வாக்குசாவடி மையங்களில் மத்திய அரசின் பணியாளர்களை தேர்தல் நாளன்று மையத்தில் இருக்கும் கேமராக்கள் வழியாக பொதுப்பார்வையாளர் வாக்குபதிவை கண்காணித்து ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கும் நடைமுறைகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்படும் பணியிடத்தில் பதற்றமான வாக்குச்சாவடி பகுதியின் தகவல்களை முன்கூட்டியே கேட்டறிந்து உங்களின் ஆலோசனைகளையும் வழங்கிடலாம். நுண் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் மின்னணு பயிற்சி வகுப்பு மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்தல் போன்ற தகவல்களை முறையாக கேட்டறிந்து சுந்திரமான நியாயமான வாக்குபதிவு நடைபெற நுண் பார்வையாளர்கள் பணியாற்றிட வேண்டும்’’ என்றார்.


Next Story