மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து


மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 17 March 2021 9:16 PM GMT (Updated: 17 March 2021 9:16 PM GMT)

மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து

திருச்சி, 
திருச்சி பொன்மலை கல்கண்டார்கோட்டை பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றி கொண்டு நேற்று காலை சரக்கு வாகனம் ஒன்று திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்து. பழைய பால்பண்ணை அருகே சென்றபோது, திடீரென மாடுகள் அங்குமிங்கும் நகர்ந்தால் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. 
இதை கண்ட வாகன ஓட்டிகள் ஓடி சென்று சரக்கு வாகனத்துக்குள் சிக்கி இருந்த டிரைவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவருக்கு காயமின்றி உயிர்தப்பினார். மாடுகளும் காயமின்றி தப்பின. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story