தேர்தலில் பணம், பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க திருச்சியில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை


தேர்தலில் பணம், பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க திருச்சியில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 17 March 2021 9:16 PM GMT (Updated: 17 March 2021 9:16 PM GMT)

தேர்தலில் பணம், பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க திருச்சியில் தங்கும் விடுதிகளில் போலீசார் இரவு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.


திருச்சி,
தேர்தலில் பணம், பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க திருச்சியில் தங்கும் விடுதிகளில் போலீசார் இரவு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தங்கும் விடுதிகளில் சோதனை

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் மாநகர போலீசார், துணை ராணுவப்படையினருடன் இணைந்து நேற்று முன்தினம் காலை முதல் இரவு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு 

மத்திய பஸ்நிலையம் உள்பட பல பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளியூரை சேர்ந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதுடன், அவர்கள் வைத்து இருந்த உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதேபோல் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சோதனைச்சாவடி வழியாக திருச்சி மாநகருக்குள் வரும் கார் மற்றும் வேன், கன்டெய்னர் உள்பட அனைத்து வாகனங்களிலும் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர சோதனை நடத்தினார்கள்.

Next Story