சேலத்தில் மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்தல் -பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது


சேலத்தில் மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்தல் -பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 18 March 2021 5:17 AM IST (Updated: 18 March 2021 5:17 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்திய பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். மொபட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (வயது 30) என்பதும், தாதகாப்பட்டி பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ.36 ஆயிரத்து 350 மதிப்பிலான 1,150 புகையிலை பாக்கெட்டுகள், ஏற்கனவே புகையிலை விற்று வைத்திருந்த ரூ.1 லட்சத்து 650 ரொக்கம் மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற மகேந்திரகுமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story