ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2021 12:05 PM GMT (Updated: 2021-03-20T17:35:15+05:30)

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராகேஷ் குமார் வர்மா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு, 1950 வாக்காளர் வலைதள உதவி மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆலந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராகேஷ் குமார் வர்மா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலமுருகன், (வேளாண்) கணேசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story