வேலூர், அணைக்கட்டு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


வேலூர், அணைக்கட்டு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2021 2:04 PM GMT (Updated: 2021-03-20T19:34:54+05:30)

வேலூர், அணைக்கட்டு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர், அணைக்கட்டு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அங்கு செய்யப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர்கள் வழங்கும் ஆலோசனையின்படி வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை போன்றவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் முகவர்களுக்கும் வாக்கு எண்ணும் மேசைக்கு இடையில் சவுக்கு மரம் மற்றும் கம்பி வலைகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலான வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கேற்ப வாக்கு எண்ணும் மேஜைகள் அமைப்பது, வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு வரும் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல தனிதனியாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றார். 

ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கணேஷ், (வேலூர்), வெங்கட்ராமன் (அணைக்கட்டு), மாநகராட்சி செயற் பொறியாளர் கண்ணன், பொறியாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story