கடற்கரை கிராமங்களில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு


கடற்கரை கிராமங்களில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு
x
தினத்தந்தி 20 March 2021 3:45 PM GMT (Updated: 20 March 2021 3:45 PM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கிராமப்புற பகுதிகளில் துணை ராணுவத்தின் அணி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பனைக்குளம்,
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கிராமப்புற பகுதிகளில் துணை ராணுவத்தின் அணி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
உத்தரவு

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில், கடலோர பகுதிகள் மற்றும் முக்கிய கிராமங்கள்தோறும் துணை ராணுவ பாதுகாப்புடன் தேர்தலை அமைதியாக நடத்த அணிவகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
நேற்று தேவிப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அழகன்குளம், பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிப் பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட ராணுவ பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு நடத்தினர்.   தேவிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். துப்பாக்கி ஏந்தியவாறு ராணுவத்தினர் அணிவகுத்து சென்றனர்.
வரவேற்பு
 
இவர்களுடன் தேவிப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீசார் தீலிபன், பாலமுருகன் உள்ளிட்டவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அப்போது துணை ராணுவ படையினரை கிராம மக்கள் வரவேற்றனர். இதுபோல் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  கார்த்திக் உத்தரவின்படி, ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பாக கடலோரப் பகுதி கிராமங்களில் துணைராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story