பறக்கும் படை சோதனையில் கேரளாவை சேர்ந்த 2 பேரிடம் ரூ.3¾ லட்சம் பறிமுதல்


பறக்கும் படை சோதனையில் கேரளாவை சேர்ந்த 2 பேரிடம் ரூ.3¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2021 4:40 PM GMT (Updated: 20 March 2021 4:40 PM GMT)

கம்பத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கேரளாவை சேர்ந்த 2 பேரிடம் ரூ.3¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி:
கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது கேரளாவில் இருந்து வந்த காரில் சோதனையிட்டனர். அந்த காரில் வந்த கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த வாசுதேவ் (வயது 30) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது. மாடு வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாக அவர் கூறினார். ஆனால், அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
இதேபோல் அதே இடத்தில் நடந்த வாகன தணிக்கையின் போது கேரளாவில் இருந்து வந்த சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் வந்த கேரள மாநிலம் ரோசாப்பூகண்டம் அமராவதி பகுதியை சேர்ந்த மகேஷ் (29) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணத்திற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. 
இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஒரே இடத்தில் 2 பேரிடம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பணத்தை பறக்கும் படையினர் உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Next Story