தூத்துக்குடியில் 13 பேருக்கு கொரோனா


தூத்துக்குடியில் 13 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 March 2021 5:36 PM GMT (Updated: 2021-03-20T23:06:16+05:30)

தூத்துக்குடியில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி, மார்ச்:
தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு மீண்டும் தயார்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு 700 படுக்கை வசதிகள் உள்ளது. இதேபோல் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 426 ஆக உள்ளது. இதில் 16 ஆயிரத்து 239 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். தற்போது 44 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 143 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

Next Story