தூத்துக்குடியில் கார் கவிழ்ந்து விபத்து


தூத்துக்குடியில் கார் கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 20 March 2021 5:43 PM GMT (Updated: 2021-03-20T23:13:49+05:30)

தூத்துக்குடியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி, மார்ச்:
தூத்துக்குடி மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி வி.இ.ரோட்டில் சாலையோரத்தில் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த வழியாக காரில் வந்த ஒருவர் சாலையின் ஓரத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக பள்ளத்துக்குள் கார் கவிழ்ந்தது.
ஆனால் காரில் இருந்தவர் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story