பழமையான செப்பு பாத்திரங்கள் கண்டெடுப்பு


பழமையான செப்பு பாத்திரங்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 20 March 2021 6:03 PM GMT (Updated: 20 March 2021 6:03 PM GMT)

முத்துப்பேட்டை அருகே குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டிய போது பழமையான செப்பு பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன.

முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டை அருகே குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டிய போது பழமையான செப்பு பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன.
செப்பு பாத்திரங்கள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை-மேலக்காடு பகுதியில் உட்புறசாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சாலை பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் சாலையை தோண்டி ஊராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அதே பகுதியில் உள்ள கருணாநிதி என்பவர் வீட்டுக்கு முன்பு தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர். அப்போது அந்த பள்ளத்தில் பழமையான செப்பு பாத்திரங்கள் கிடந்தன.
இதில் ஒன்று இரண்டு உருளை வளையத்துடனும், மற்றொன்று ஒரு உருளை வளையத்துடன் காணப்பட்டது. அதனுடன் ஒரு கல் அம்மியும் கிடைத்தது.
பொதுமக்கள் பார்த்து சென்றனர் 
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து செப்பு பாத்திரங்களை பார்த்து சென்றனர். இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மாதையன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து கண்டெடுக்கப்பட்ட பழமையான செப்பு பாத்திரங்கள் மற்றும் கல் அம்மியை மீட்டு திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story