மதுபாட்டில்கள் பறிமுதல்


மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2021 6:08 PM GMT (Updated: 2021-03-20T23:38:18+05:30)

திருவாரூர் அருகே மதுக்கடையில் திருடி கடத்தி செல்லப்பட்ட ரூ.1¼ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வலங்கைமான் அருகே வாகன சோதனையில் சிக்கியது. இதனையடுத்து மதுபாட்டில்களும், மதுபாட்டில்களை கடத்தி வர பயன்படுத்திய மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர்;
திருவாரூர் அருகே மதுக்கடையில் திருடி கடத்தி செல்லப்பட்ட ரூ.1¼ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வலங்கைமான் அருகே வாகன சோதனையில் சிக்கியது. இதனையடுத்து மதுபாட்டில்களும், மதுபாட்டில்களை கடத்தி வர பயன்படுத்திய மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது. 
1085 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி சோதனை சாவடியில் தேர்தலையொட்டி போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை பாலீசார் மறித்தனர். அப்போது வேனை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார், 
 இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனை செய்த போது வேனில் சாக்கு மூட்டையில் 1085 மதுபாட்டில்கள் இருந்தது  தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மதுபாட்டிகள் மற்றும் அதை கடத்தி வந்த மினிவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
மதுக்கடையை உடைத்து திருட்டு
இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் தமிழகத்தை சேர்ந்தவை என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். 
போலீசாரின் விசாரணையில் திருவாரூர் அருகே உள்ள அகரத்திருநல்லூர் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடத்தி செல்லப்பட்ட மதுபாட்டில்கள் என்பது தரிய வந்தது. 
வழக்குப்பதிவு
பறிமுதல் செய்யப்பட்ட 1085 மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மதுக்கடையில் திருடி சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

Next Story