கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ரத்து

கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ரத்து
பல்லடம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் சூறாவளிப்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்லடம் பஸ் நிலையம் எதிரே நேற்று காலை 11 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், கமல்ஹாசன் வருகைக்காக காத்திருந்தனர். வாத்தியங்கள் இசைக்கும் குழுவினரும் காத்திருந்தனர். தேர்தல் பிரசார பாதுகாப்புக்காக பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன் தலைமையில், 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் பிரசார கூட்டத்தை ரத்து செய்து விட்டதாகவும் தகவல் வந்தது. இதையடுத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கமல்ஹாசனை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
Related Tags :
Next Story