கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்கு குவியும் புகார்கள்


கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்கு குவியும் புகார்கள்
x
தினத்தந்தி 21 March 2021 1:20 AM IST (Updated: 21 March 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணிற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

புதுக்கோட்டை, மார்ச்.21-
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்ககூடிய இந்த அறையில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 18004252735 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். இதில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும், தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாகவும், சரக்கு வேனில் ஆட்களை ஏற்றி செல்வதாகவும் 14 புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் பார்வையிட்ட போது எதுவும் இல்லை என தெரியவந்ததாக தெரிவித்தனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு மேலும் பல புகார்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தேர்தல் விதிமுறகைள் மீறல் தொடர்பாக புகைப்படங்கள், வீடியோ எடுத்து cVIGIL செயலி மூலமும் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story