கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 20 March 2021 9:26 PM GMT (Updated: 2021-03-21T02:56:22+05:30)

ஆலங்குளத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் கூட்டுறவு வங்கியில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவர் செந்தட்டி காளை தலைமையில் நடைபெற்றது. இதில் ஆலங்குளம் வங்கி தலைவர் பசுபதிராஜ்க்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் கூட்டுறவு வங்கி மேலாளர், அலுவலர்கள், 100 நாள் வேலை வாய்ப்புதிட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர் மதியரசு, மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story