சிவகிரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.12¾ லட்சம் சிக்கியது.


சிவகிரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.12¾ லட்சம் சிக்கியது.
x
தினத்தந்தி 20 March 2021 10:14 PM GMT (Updated: 2021-03-21T03:44:51+05:30)

சிவகிரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.12¾ லட்சம் சிக்கியது

சிவகிரி:
புளியங்குடி மின்வாரிய அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படை அலுவலரும், வாசுதேவநல்லூர் யூனியன் ஆணையாளருமான வேலம்மாள் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவர்கள் தென்காசியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story