ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 158 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு- 71 மனுக்கள் நிராகரிப்பு


ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 158 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு- 71 மனுக்கள் நிராகரிப்பு
x
தினத்தந்தி 20 March 2021 10:35 PM GMT (Updated: 2021-03-21T04:05:01+05:30)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 158 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 71 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 158 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 71 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
வேட்பு மனு தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 23 வேட்பாளர்கள் 27 மனுக்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 22 வேட்பாளர்கள் 28 மனுக்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 24 வேட்பாளர்கள் 28 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். 
பெருந்துறை தொகுதியில் 34 வேட்பாளர்கள் 36 மனுக்களையும், பவானி தொகுதியில் 23 வேட்பாளர்கள் 32 மனுக்களும், அந்தியூர் தொகுதியில் 28 வேட்பாளர்கள் 31 மனுக்களும், கோபி தொகுதியில் 27 வேட்பாளர்கள் 34 மனுக்களும், பவானிசாகர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் 13 மனுக்களும் என மொத்தம் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 194 வேட்பாளர்கள் 229 மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஈரோடு மேற்கு
அதிகபட்சமாக பெருந்துறை தொகுதியில் 34 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பவானிசாகர் தொகுதியில் 13 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 
இந்த வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது.
இதில் ஈரோடு மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், தி.மு.க. வேட்பாளளர் சு.முத்துசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் சக்தி என்கிற சிவசுப்பிமணியன், யுனெடட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்டி வேட்பாளர் கோ.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் துரைசேவுகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ப.சந்திரகுமார், கண சங்கம்பார்ட்டி ஆப் இந்தியா கட்சி வேட்பாளர் கு.மாதன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அ.தனலட்சுமி, அம்பேத்கர் ரைட் பார்ட்டி ஆப் இந்தியா வேட்பாளர் மு.சந்திரன், இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் கு.பாலசுப்பிரமணியம், சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்.அய்யாவு, ஆர்.காளிதாஸ், கே.குணகேசரன், ஆ.முத்துசாமி, வீ.முத்துசாமி, ப.மூர்த்தி,  ம.விமலா, அ.வெங்கடேசன் ஆகிய 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
ஈரோடு கிழக்கு -மொடக்குறிச்சி
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மு.யுவராஜா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.திருமகன் ஈவெரா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கி.அகிலா, ச.கோமதி, அ.ம.மு.க. கட்சி வேட்பாளர்கள் முத்துக்குமரன், அ.அனுஷ்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஏ.எம்.ஆர்.ராஜாகுமார், எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி வேட்பாளர் சு.சண்முகவேல், அம்பேத்கர் ரைட் பார்ட்டிஆப் இந்தியா கட்சி வேட்பாளர் ஆறுமுகா ஏ.சி.கண்ணன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் செ.கோவிந்தராஜ், இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் க.சரோஜா, மக்கள் திலகம் முன்னேற்ற கழக வேட்பாளர் ப.ராஜா, சுயேட்சை வேட்பாளர்கள் மா.தமிழ்பிரபாகரன், த.பாஸ்கரன்,  ஆர்.மின்னல்  முருகேஷ், வெ.மீனாட்சி, ர.முகமது பிலால், மு.யுவராஜ், பா.விஜய் ஆனந்த், இ.ஷாஜகான், எல்.அந்தோனிபீட்டர் ஆகிய 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் சி.சரஸ்வதி, அ.ம.மு.க. வேட்பாளர் டி.தங்கராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோ.பிரகாஷ், இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் பி.மணி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ம.ராஜேஷ்குமார், நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் மு.ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஆர்.பூபதி, இந்திய கண சங்கம் கட்சி வேட்பாளர் ரா.மாணிக்கம், மை இண்டியா பார்ட்டி வேட்பாளர் ஏ.மகேஷ்வரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோவணம் தங்கவேல், ப.மயில்சாமி, விஜயகுமார், ஜெகதீஷ், சாமி கந்தசாமி, பி.சி.ரவி, எல்.பாரதி, ஜி.மோகனபிரியா ஆகிய 18 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பெருந்துறை -பவானி
பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார், தி.மு.க. வேட்பாளர் கே.கே.சி.பாலு, பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் எம்.தம்பி, தே.மு.தி.க. வேட்பாளர் பி.ஆர்.குழந்தைவேல், அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ப.வேலுச்சாமி, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் கே.எஸ்.தட்சிணாமூர்த்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.லோகநாதன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சி.கே.நந்தகுமார், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் வேட்பாளர் த.பிரபாகரன், நமது கொங்கு முன்னேற்ற கழகம் வேட்பாளர் எம்.ரமேஷ், சுயேட்சை வேட்பாளர்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், எம்.பாலமுருகன், வி.எம்.பாலசுப்ரமணி, எஸ்.ஆர்.தேவேந்திர மாணிக்கம், ஜே.கோபாலகிருஷ்ணன், நா.ஜீவா, பி.ஜோதி முருகன், ம.கார்த்தி, சு.கிருஷ்ணன், மு.மயில்சாமி, க.சம்பத்குமார், நா.சதீஷ்குமார், சங்கர்சாமி, டி.சுப்பிரமணியன், பி.ஆர்.வெங்கடாசலம், கே.வெங்கடாசலம் ஆகிய 26 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது.
பவானி    தொகுதியில் அ.தி.மு.க.    வேட்பாளர் கே.சி.கருப்பணன், கே.சி.கணேசன், தி.மு.க. வேட்பாளர்  கே.பி.துரைாஜ், டி.கலைச்செல்வி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எம்.கோபால், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் க.அம்மாசை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மு.சத்யா, அ.கேத்தரின், மக்கள் நீதி  மய்யம் கட்சி வேட்பாளர் கே.சதானந்தம், அ.ம.மு.க. வேட்பாளர் ரா.சத்யா, எம்.ராதாகிருஷ்ணன், அகில பாரத இந்து மகாசபா வேட்பாளர் எஸ்.தொல்காப்பியன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி வேட்பாளர் ரா.பு.ஜனார்த்தனம், சுயேச்சை வேட்பாளர்கள் அ.அப்துல் காதர், கு, அப்பிச்சி, மா.கருப்பணன், ந.கார்த்தி, ப.கார்த்திகேயன், பெ.சதீஷ்குமார், வி.எம்.பெருமாள், சீ.மோகன், கு.ரவிச்சந்திரன், ஜி.ஸ்டேன்லி ஆகிய 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அந்தியூர் -கோபி
அந்தியூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேல், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கு.பாட்டன், தி.மு.க. வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் இ.ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மு.குருநாதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.சரவணன், இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் எம்.பாக்கியம், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.பிரதாபன், இந்திய கண சங்க கட்சி வேட்பாளர் கே.ராஜேந்திரன், சுயேச்சை வேட்பாளர்கள் கோ.அன்பழகன், எம்.கீதா, ரா.குமாரசாமி, ரா.கார்த்திகேயன், கு.சண்முகம், எம்.ஆர்.செங்குட்டுவன், மு.தங்கவேல், ர.தீபன், செ.பூர்ணசந்திரன், தா.பெரியசாமி, மு.முத்துசாமி, ஏ.எம்.சேக்தாவுத் ஆகிய 22 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோபி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பி.பழனிச்சாமி, தி.மு.க. வேட்பாளர் ஜி.வி.மணிமாறன், இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் கு.சக்திவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி, அ.ம.மு.க. கட்சி வேட்பாளர் நா.க.துளசிமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் என்.கே.பிரகாஷ், சுயேட்டை வேட்பாளர்கள் த.குமார், கு.அ.சங்கர் குமார், எஸ்.செல்வக்குமார், ர.செல்வகுமார், கே.தனபால், நா.தேவராஜ், மா.பழனிசாமிராஜ், ப.பாஸ்கரன், ஏ.என்.பூபதி ராஜா, பா.முத்துமணி, எஸ்.மூர்த்தி, கே.மோகன்ராஜ், ர.ராக்கிமுத்து ரங்கநாடார், மு.ஜுனாயத், ஆர்.ஸ்ரீதேவி ஆகிய 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரம், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜி.சக்திவேல், தே.மு.தி.க. வேட்பாளர் ஜி.ரமேஷ், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் கே.கார்த்திக்குமார், ஆர்.சரண்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் வி.சங்கீதா, ரா.வித்யா மகேஸ்வரி ஆகிய 8 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 158 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 71 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நாளை (திங்கட்கிழமை) வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட உள்ளனர்.

Next Story