பழனி பகுதியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் இ.பெ.செந்தில்குமார் வாக்குறுதி


பழனி பகுதியில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் இ.பெ.செந்தில்குமார் வாக்குறுதி
x
தினத்தந்தி 21 March 2021 3:41 AM GMT (Updated: 21 March 2021 3:41 AM GMT)

பழனி பகுதியில் தொழிற் சாலைகள் உருவாக்கப் பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று இ.பெ.செந்தில்குமார் எம். எல்.ஏ. உறுதி அளித்தார்.

பழனி, 

பழனி சட்டமன்ற தொகுதி யில் தி.மு.க. சார்பில் தற் போதைய எம்.எல்.ஏ இ.பெ.செந்தில்குமார் போட்டியிடு கிறார். இதற்காக அவர் தலை மையிலான தி.மு.க.வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று பழனி அருகே அக்கம நாயக்கன்புதூர், கரடி கூட்டம், கிருஷ்ணாபுரம், வடக்கு தாதநாயக்கன்பட்டி, காவலப்பட்டி, மல்லையக் கவுண்டன்பட்டி, லட்சலப் பட்டி, அய்யம்பாளையம், வாடிப்பட்டி, ஆண்டிபட்டி, மண்திட்டு, சின்னம்மாபட்டி, குப்பம்பாளையம், நரிப்பாறை, குதிரையாறு அணை, பூஞ் சோலை, லட்சுமாபுரம், சித்த ரேவு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேற்கண்ட பகுதிகளில் அவர் வாக்குசேகரிப்புக்கு வந்தபோது, திரளான பெண்கள ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். மேலும் இளைஞர்கள், சிறுவர்கள் பலர் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.  பிரசாரத்தின்போது இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:--

பழனி பகுதியில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள பச்சையாறு அணை திட்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படுவது உறுதி. குதிரையாறு அணையில் இருந்து அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களுக்கு குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அணை பகுதியில் உறை கிணறு அமைத்து அங்கிருந்து குடிநீர் எடுத்து கிராம பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும். 

ஏழை மக்களுக்  நலத் திட்டங்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்படும். 2 பெண் குழந்தைகள் பிறந்தால் வழங்கப்படும் வைப்புத்தொகை, முதியோர் உதவித்தொகை போன்றவை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவு டன் நிறுத்தப்பட்ட பயனாளி களுக்கு நிச்சயம் உதவித் தொகைகள் வழங்கப்படும்.
தொழிற்சாலைகள்...

பழனி பகுதியில் இளைஞர் கள் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே பழனியில் போதிய தொழிற்சாலைகள் ஏற்படுத் தப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். கிராமப்புற மக்களுக்கு ஆதாரமாக உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித நலத்திட்டங்களும் நடைபெறவில்லை. 

பெட்ரோல்-டீசல் விலை மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனை குறைக்க மனமில்லாமல் அ.தி.மு.க. அரசு உள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக தருவேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்லவும், மக்கள் நல்வாழ்வு பெறவும் வாக்காளர்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தின்போது திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story