கோவை மாவட்டத்தில் ஒரேநாளில் 103 பேருக்கு கொரோனா


கொரோனா
x
கொரோனா
தினத்தந்தி 21 March 2021 9:41 AM GMT (Updated: 2021-03-21T15:11:33+05:30)

கோவை மாவட்டத்தில் ஒரேநாளில் 103 பேருக்கு கொரோனா

கோவை

தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியான கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்து 23 ஆக உயர்ந்தது.

 கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 61 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் இதுவரை 55 ஆயிரத்து 702 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

கடந்த 4-வது நாளாக கொரோனா தொற்றுக்கு உயிர் பலி எதுவும் இல்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி 686 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 தற்போது கோவை அரசு ஆஸ்பத்தி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 635 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story