செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி


செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 21 March 2021 12:01 PM GMT (Updated: 2021-03-21T17:31:05+05:30)

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது.

இதையொட்டி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஜான் லூயிஸ் தலைமையில் நடந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பயன்படுத்தவேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு தணிக்கை, எந்திரம் கையாள்வது, அஞ்சல் வாக்குப்படிவம் பெறுவது, வாக்குச்சாவடிக்கு உரிய படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது, தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது போன்ற நியமனம் செய்யப்பட்ட மண்டல அலுவலர்களுக்கான கடமையும்,பொறுப்புகளும் குறித்து மண்டல அலுவலர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story