மது விற்ற 11 பேர் கைது


மது விற்ற 11 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2021 3:39 PM GMT (Updated: 2021-03-21T21:09:42+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி உள்ளிட்ட 8 போலீஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 11 பேர் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களிடமிருந்து 125 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
போலீசார் தீவிர ரோந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தூத்துக்குடி வடபாகம், மற்றும் மதுவிலக்கு பிரிவு, புதுக்கோட்டை, குலசேகரப்பட்டணம், ஏரல், கழுகுமலை, நாசரேத், கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய 8 போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Next Story