திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள், தையல் எந்திரம் எரிந்து நாசம் ஆனது.

திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள், தையல் எந்திரம் எரிந்து நாசம் ஆனது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள், தையல் எந்திரம் எரிந்து நாசம் ஆனது.
தீ விபத்து
திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே கங்காநகர் செல்லும் சாலையில் ராகுல்தோடி என்பவருக்கு சொந்தமான லக்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்ற பனியன் நிறுவனம் உள்ளது. இந்த பனியன் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை 5 மணிக்கு வேலை முடிந்ததும், பனியன் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் இரவு 7 மணிக்கு பனியன் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
உடனே அருகில் இருந்தவர்கள் பனியன் நிறுவன உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு விரைந்து வரும் முன்பு பனியன் நிறுவனத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடயே தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வண்டியில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியில்லை. இதையடுத்து மேலும் ஒரு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதற்காக 4 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
பொருட்கள் எரிந்துநாசம்
இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் மற்றும் தையல் எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீயில் கருகி நாசமான துணிகள் மற்றும் தையல் எந்திரங்களில் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story