வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல்


வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2021 5:43 PM GMT (Updated: 21 March 2021 5:43 PM GMT)

மறவமங்கலம் அருகே நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை,

மறவமங்கலம் அருகே நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் அந்த பணத்திற்கு உரிய கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.மேலும் பணநடமாட்டத்தை கட்டுப்படுத்த பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரை நியமனம் செய்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிலையான கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு மறவமங்கலம்- சிரமம் சந்திப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.2½ லட்சம் பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கார்த்திக் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. வியாபாரம் விஷயமாக அந்த பணத்தை அவர் எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
இருப்பினும் ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

19 மதுபாட்டில்கள் சிக்கின

 சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி மாவட்ட கலால் துறை மற்றும் டாஸ்மாக் அலுவலக அலுவலர்கள் கொண்ட குழு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில் நேற்று சிவகங்கை பஸ் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த முத்துசாமி என்பவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சிவகங்கை டவுன் மரக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சந்திரன் என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story