சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள்


சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள்
x
தினத்தந்தி 21 March 2021 6:24 PM GMT (Updated: 2021-03-21T23:54:45+05:30)

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சிவகங்கை,

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை

நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளையும் கண்காணிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் எச்.எஸ்.சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கரநாராணயணன் ஆகிய 2 பொது பார்வையாளர்களும், ராகேஷ் படாடியா, வனஸ்ரீ ஹீள்ளன்னவா ஆகிய 2 செலவின பார்வையாளர்களும் போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ்.அதிகாரி லிரெமோ சோபோ லோதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் 5 பேரும் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துவிட்டனர்.
5 பார்வையாளர்களும் சட்டமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர்.
ஏற்பாடுகள் தயார்
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலையொட்டி, ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக தேவையான சக்கரநாற்காலி மற்றும் சாய்தளம், குடிநீர் வசதி உள்பட அத்தியாவசிய தேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.Next Story