கார் மோதி 2 பேர் பலி


கார் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 March 2021 7:53 PM GMT (Updated: 2021-03-22T01:23:52+05:30)

ஆலங்குடி அருகே கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

ஆலங்குடி
தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. முக்காணிப்பட்டி விலக்கு ரோடு அருகே வந்தபோது அந்த வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெருங்கொண்டான் விடுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 40) மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அண்டக்குளம் அருகே உள்ள காலிங்கராயன்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45), பின்னால் அமர்ந்து சென்ற வீரக்குடியை சேர்ந்த குமார்(46) ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில், நாகராஜ், குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சைக்கிளில் சென்ற தங்கராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவூதீன், சம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஜாக் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story