விருத்தாசலம் அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு


விருத்தாசலம் அருகே  வாகனம் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 21 March 2021 7:55 PM GMT (Updated: 2021-03-22T01:25:41+05:30)

வாகனம் மோதி வாலிபர் சாவு

திட்டக்குடி, 
திட்டக்குடி அருகே உள்ள இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கருணாநிதி (வயது 32). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்துக்கு புறப்பட்டாா்.
விருத்தாசலம் அடுத்த ஆவினங்குடி கண்மணி நகர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கருணாநிதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருணாநிதியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணாநிதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டியை தேடி வருகிறார்கள்.

Next Story