அருப்புக்ேகாட்டையில் தீவிர வாகன சோதனை


அருப்புக்ேகாட்டையில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 21 March 2021 9:09 PM GMT (Updated: 2021-03-22T02:39:53+05:30)

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

அருப்புக்கோட்டை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 
வாகன சோதனை 
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
பரிசு பொருட்கள் 
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளிலிருந்து அருப்புக்கோட்டை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் 3 குழுக்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பறக்கும் படை குழுவை சேர்ந்தவர்கள் பாலையம்பட்டி வழியாக நகருக்குள் செல்லும் வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
வாகன சோதனைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Next Story