கட்சி கொடிகள் கட்டியது தொடர்பாக பா.ம.க.வினர் மீது வழக்கு


கட்சி கொடிகள் கட்டியது தொடர்பாக பா.ம.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 March 2021 9:39 PM GMT (Updated: 21 March 2021 9:39 PM GMT)

கட்சி கொடிகள் கட்டியது தொடர்பாக பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு தேர்தல் பிரசாரம் செய்தார். இதையொட்டி நேற்று காலை நான்கு ரோடு முழுவதும் பா.ம.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. தேர்தல் விதிமுறைகளின் படி அனுமதியின்றி கட்சிக் கொடிகள், பதாகைகள் கட்டக்கூடாது என்ற விதி இருப்பதால் திடீரென நேற்று மதியம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் கலைவாணன் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கட்சிக் கொடிகளை அகற்றினர். 
இது பற்றி தகவலறிந்து வந்த பா.ம.க.வினர் தங்கள் கட்சிக்கொடி கட்டுவதற்கு அனுமதி பெற்றிருந்த கடிதத்தை காண்பித்தனர். இதையடுத்து அனுமதிச்சீட்டில் உள்ள எண்ணிக்கையின்படி கொடிகள் கட்டப்பட்டு இருக்கின்றதா? என்று கொடிகளை எண்ணிப் பார்த்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் நகர செயலாளர் மாதவன்தேவா உள்ளிட்ட பா.ம.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story