சேலம் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 March 2021 9:56 PM GMT (Updated: 2021-03-22T03:26:33+05:30)

சேலம் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்  எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் 28 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
முக கவசம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதேநேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரி, குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

Next Story