ஆத்தூரில் கைது செய்யப்பட்ட முகமூடி கொள்ளை கும்பல் தலைவனுக்கு கொரோனா


ஆத்தூரில் கைது செய்யப்பட்ட முகமூடி கொள்ளை கும்பல் தலைவனுக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 March 2021 10:01 PM GMT (Updated: 21 March 2021 10:01 PM GMT)

ஆத்தூரில் கைது செய்யப்பட்ட முகமூடி கொள்ளை கும்பல் தலைவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த ருக்மணி (வயது 40) என்பவரது வீட்டில் கடந்த மாதம் 18-ந் தேதி நள்ளிரவு புகுந்த முகமூடி கும்பல், 9 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதேபோல், வாழப்பாடி, வீரகனூர் பகுதியிலும் 3 வீடுகளுக்குள் அதே கும்பல் புகுந்து 40 பவுன் நகையை கொள்ளையடித்தது. இந்த கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அம்மையகரத்தை சேர்ந்த ராஜா (33) என்பது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் ஆத்தூரில் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இந்தநிலையில், கைதான முகமூடி கும்பல் தலைவனை சிறையில் அடைக்க கொரோனா பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கொள்ளையன் ராஜாவுக்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் உடனே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story