வாழப்பாடி அருகே விவசாயி பிணம்


வாழப்பாடி அருகே விவசாயி பிணம்
x
தினத்தந்தி 21 March 2021 10:13 PM GMT (Updated: 2021-03-22T03:43:08+05:30)

வாழப்பாடி அருகே மலையடிவாரத்தில் விவசாயி பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.

வாழப்பாடி:
வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் உடும்புகல்குட்டை பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). விவசாயி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் வளர்க்கும் ஆடுகளை விற்று அதில் வரும் பணத்தை வைத்து மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி காலை 2 ஆடுகளுடன் வீரமுத்துவை காணவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை கோது மலை அடிவாரத்தில் அழுகிய நிலையில் வீரமுத்துவின் உடல் கிடப்பதாக குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து வீரமுத்துவின் மனைவி பெருமாயி வாழப்பாடி போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரமுத்து உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story