லால்குடி தொகுதியில் புள்ளம்பாடி ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற முயற்சி செய்வேன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி
லால்குடி தொகுதியில் புள்ளம்பாடி ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற முயற்சி செய்வேன் த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் வாக்குறுதி அளித்தார்.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தமாகா கட்சி வேட்பாளர் தர்மராஜ் புள்ளம்பாடி அதிமுக தெற்கு ஒன்றியம் நெடுங்கூர், நெய்குளம், பி.கே.அகரம், ரெட்டி மாங்குடி, கொளக்குடி, கண்ணாகுடி, மல்லிகைபுரம், விடுதலைபுரம், குமுளூர், வந்தலை கூடலூர், புஞ்சை சங்கேந்தி உள்ளிட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, நான் நகர் கிராமத்தை சேர்ந்தவன். இந்த மண்ணின் மைந்தன். என் தந்தை 2 முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக 1967, 1971 ஆண்டு லால்குடி சட்ட மன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இரட்டைஇலை சின்னத்துக்கு வாக்களிக்கவும். நான் லால்குடி சட்டமன்ற தொகுதியை லால்குடி தாலுகாவில் உள்ள கல்லக்குடி, புள்ளம்பாடியை ஒன்றிணைத்து பொதுமக்களின் அரசு பணிகளை எளிமையாக முடிக்க தனி தாலுகாவாக அமைத்து கொடுக்க முயற்சி செய்வேன் என்றும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் பருத்தி, மக்காச்சோளம் அரசு நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க முயற்சி மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.
இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. கட்சியின் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர்கள் புள்ளம்பாடி ஜேக்கப் அருள்ராஜ், கல்லகுடி பிச்சை பிள்ளை, மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி மேரி ஜார்ஜ், புள்ளம்பாடி ஒன்றிய பொருளாளர் மருதமுத்து, த.மா.கா. வட்டார தலைவர் செல்வகுமார், நகர தலைவர் தன்ராஜ், நகர துணைத்தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்திரசேகரன், மாநில விவசாய அணி தலைவர் சங்கேந்தி, தியாகராஜன், ஊராட்சி தலைவர்கள் நெய்குளம் அசோகன், கண்ணாகுடி சுகன், குமுளூர் பழனியம்மாள் சின்னசாமி உள்பட அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story