செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 23 March 2021 3:10 PM IST (Updated: 23 March 2021 3:10 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மத்திய துணை ராணுவத்தினர் 60 பேர் வந்தனர். வருகிற சட்ட மன்ற தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையில் அந்த வீரர்கள் நவீன துப்பாக்கிகளுடன் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் பஜார் வீதி வழியாக கிழக்கு கடற்கரை சாலை வந்து போலீஸ் நிலைய எல்லை வரை கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர்.

Next Story