தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்துவேன் அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்குறுதி


தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்துவேன் அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்குறுதி
x
தினத்தந்தி 24 March 2021 3:47 PM IST (Updated: 24 March 2021 3:47 PM IST)
t-max-icont-min-icon

என்னை வெற்றி பெற செய்தால் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்துவேன் என வாக்கு சேகரிப்பின்போது அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்குறுதி அளித்துள்ளார்.

சீர்காழி, 

சீர்காழி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்  பி.வி. பாரதி, சீர்காழி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திட்டை,  தில்லைவிடங்கன், செம்மங்குடி, விளந்திட சமுத்திரம், அத்தியூர் ஆகிய கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் கூறுகையில், சீ்ர்காழி தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வருடத்திற்கு 6 சிலிண்டர், மாதம் தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.1,500, வாஷிங் மெஷின், மும்முனை மின்சாரம் என்பன உள்பட அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்துவேன். 

கடந்த 5 ஆண்டுகளில் சீர்காழி சட்டசபை தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். 

தொடர்ந்து நிம்மேலி, மருதங்குடி, வள்ளுவக்குடி, கொண்டல், ஆலஞ்சேரி என்பன உள்ளிட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு தெருத்தெருவாக சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் செல்லையன், ரமாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி, மாவட்ட இணைச் செயலாளர் ரீமா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் நாடி செல்வமுத்துகுமரன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வெங்கடேசன், த.மா.கா. மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள், மாலினி, மதியழகன், ஒன்றிய உறுப்பினர்கள் விஜயகுமார், ஆனந்தி நடராஜன் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர். 

Next Story