சீர்காழி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவேன்; அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி. பாரதி வாக்குறுதி
சீர்காழி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி. பாரதி வாக்கு சேகரிப்பின் போது வாக்குறுதி அளித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பு
சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தேர் வடக்கு வீதி ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருந்து சீர்காழி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து புளிச்சகாடு, பெத்தடிதெரு, ஈசானிய தெரு, கோவிலான்தெரு, கீழ தென்பாதி, கீழத்தெரு, பிடாரி தெற்கு வீதி, செட்டித்தெரு, மேல மாரியம்மன் கோவில் தெரு, தேர் வடக்கு வீதி, பிடாரி வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் தெருத்தெருவாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
பாதாள சாக்கடை
அப்போது அவர் கூறுகையில், சீர்காழி அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கூடுதல் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கொள்ளிடம் முக்கூட்டில் ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு ரூ.2 கோடியே 50 லட்சத்தில் புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. வரும் காலங்களில் சீர்காழி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர முழுமையாக பாடுபடுவேன் என்றார்.
தாடாளன் மேலவீதி
இதைத் தொடர்ந்து திருக்கோலக்கா, புழுகாப்பேட்டை, தாடாளன் மேலவீதி, காயிதே மில்லத்தெரு, ரெயில்வே ரோடு, தாடாளன்கோவில், காமராஜபுரம், பன்னீர்செல்வம் தெரு, திருக்கோலக்கா, தென்பாதி, திட்டை ரோடு, பணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, பாட்டாளி மக்கள் கட்சி வக்கீல் பிரிவு நிர்வாகி செல்வராஜ், மூவேந்தர் முன்னேற்ற கழக நகர அவைத் தலைவர் பாலு, பாரதீய ஜனதா கட்சி நகர தலைவர் அருணாச்சலம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பாலு, பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் சின்னையன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மணி, பரணிதரன், நெடுஞ்செழியன், இறை எழில், லட்சுமி, சம்பந்தம், ஜெயச்சந்திரன், சுரேஷ் பாலகுமாரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story