சுந்தரப்பெருமாள் கோவிலில் பூச்சந்தை அமைக்கப்படும்; மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி


சுந்தரப்பெருமாள் கோவிலில் பூச்சந்தை அமைக்கப்படும்; மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி
x
தினத்தந்தி 25 March 2021 7:30 AM IST (Updated: 25 March 2021 7:30 AM IST)
t-max-icont-min-icon

சுந்தரப்பெருமாள் கோவிலில் பூச்சந்தை அமைக்கப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி அளித்துள்ளார்.

வாக்கு சேகரிப்பு
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்  ஜவாஹிருல்லா நேற்று பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்  உதயசூரியன்சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர வாக்குசேகரிப்பில் 
ஈடுபட்டார். பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள் கோவில், திருவலஞ்சுழி வலையபேட்டை, சுவாமிமலை, நாகக்குடி, வையசேரி, பெருமாநல்லூர் காவலூர், அகரமாங்குடி, சித்தர்காடு, வேம்புகுடி, செருமாக்கநல்லூர் வடக்குமாங்குடி, தேவராயன் பேட்டை, திருவையாத்துக்குடி, மேல செம்மங்குடி, ஒன்பத்துவேலி ஆகிய கிராமங்களில் வாக்குசேகரித்த ஜவாஹிருல்லா மக்கள் மத்தியில் கூறியதாவது:- 

பூச்சந்தை
அம்மாப்பேட்டை ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க உறுதுணையாக இருப்பேன். மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பாடுபடுவேன். நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். சுந்தரபெருமாள் கோவில் பகுதியில் பூச்சந்தை அமைத்து தரப்படும். சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள சவுந்தரராஜபெருமாள் கோவில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். தஞ்சாவூர்- கும்பகோணம் தேசியநெடுஞ்சாலை தரம் உயர்த்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், சுரேஷ்குமார், பி.எஸ்.குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் இருந்தனர்.

Next Story