திருச்சி கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு


அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்குசேகரித்த போது
x
அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்குசேகரித்த போது
தினத்தந்தி 25 March 2021 9:45 AM IST (Updated: 25 March 2021 9:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் நேற்று பெரியகடைவீதி, பைரவர் கோவில் அருகில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதில் 16, 17 ஆகிய வார்டுகளில் உள்ள சவுராஷ்டிரா தெரு, ராணி தெரு, சின்ன சவுராஷ்டிரா தெரு, கள்ளத்தெரு, பெரியகடைவீதி, ஜாபர்ஷாதெரு, சமஸ்பிரான்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை வீடு, வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே போல நேற்று மாலை 12, 12 எ, ஆகிய வார்டுகளில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல், வள்ளுவர்நகர், ஜீவாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். 

அப்போது அவர், தி.மு.க. கூட்டணி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. திருநாவுக்கரசை, தேர்தலுக்கு பிறகு நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் அவர்களிடம், திருச்சி எம்.பி. திருநாவுக்கரசரை கண்டுபிடித்து கொடுத்தால் நான் பரிசு தருகிறேன் என்று கேட்டுக்கொண்டார். அதே போல் தற்போது தி.மு.க. கூட்டணியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரும், வெளியூர் நபர்தான், எம்.பி.யை தேடுவது போல் அவரையும் தேட வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வரும். நான் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் 
என்றார். 

பிரசாரத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவகர்லால்நேரு, வட்ட செயலாளர்கள் திலீப், ராமசாமி, நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், வழக்கறிஞர் அணி சுரேஷ், காசி பாளையம் சுரேஷ் உள்ளிட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story