வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு


வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 25 March 2021 10:12 PM IST (Updated: 25 March 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. கொரோனா தொற்று உள்ள காரணத்தால் 1,050 வாக்காளர்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு, 868 வாக்குச்சாவடிகள் ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி ஊட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பனுதர் பெஹரா நேற்று வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஊட்டி அருகே தலைகுந்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சாண்டிநல்லா தபால் நிலைய வாக்குச்சாவடி, முள்ளிமலை உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு மாற்றுத்திறனாளிகள் சென்று வாக்களிக்க சாய்வு தளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா, கழிப்பிடம், குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

Next Story