கோவில் உண்டியலை உடைத்து திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 26 March 2021 1:33 AM IST (Updated: 26 March 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கலில் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டது.

சிவகாசி,

திருத்தங்கல் பனையடிப்பட்டி தெருவில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை யாரோ மர்ம ஆசாமி உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் பொருளாளர் முருகையா கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story