அரியலூர் தொகுதி வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை, பெண்கள் பூரண கும்பத்துடன் வரவேற்றபோது எடுத்த படம்.
x
அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை, பெண்கள் பூரண கும்பத்துடன் வரவேற்றபோது எடுத்த படம்.
தினத்தந்தி 26 March 2021 6:30 AM IST (Updated: 26 March 2021 6:32 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட திருமானூர் ஒன்றிய கிழக்கு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு கொள்ளிடத்தில் மேலராமநல்லூரை இணைத்து மேம்பாலம் கட்டி உள்ளது. கொள்ளிடத்தில் தூத்தூரில் தடுப்பணை கட்டப்படும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சிக்கு வந்து, அந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.  நல்ல பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து, தன்னை வெற்றிபெற செய்யுமாறு, கேட்டுக்கொண்டார்.   

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவழகன், பா. ம.க. தொகுதி செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் வினோத், த.மா.கா. மாவட்ட தலைவர் குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் அரியலூர் அருகே உள்ள கீழப்பழுவூரில் அ.ம. மு.க. மற்றும் மாற்றுக்கட்சியை சேர்ந்த 60 பெண்கள் உள்பட 100 பேர் ஊராட்சி மன்ற தலைவி தனலெட்சுமி மருதமுத்து தலைமையில் அரியலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story