மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி; திருவெறும்பூரை தி.மு.க. கோட்டையாக மாற்றுங்கள்; அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு, சோழமாதேவி ஆகிய ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:-
திருவெறும்பூர் தொகுதியில் நீங்கள் ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்வீர்கள். ஆனால் வேறு கட்சியை சேர்ந்தவர் தான், முதல்- அமைச்சராக இருப்பார். கடந்த 5 ஆண்டுகளாக போராடி போராடி உங்களுடைய கோரிக்கைகள் வைக்கப்பட்டு, அதில் 10 கோரிக்கைகளில் 4, 5 கோரிக்கைகள் தான் செய்து முடிக்கப்படுகின்றன. இன்றைக்கு இது ஒரு ஆளுங்கட்சி தொகுதியாக மாறுவதற்கான நல்ல சந்தர்ப்பம். வருகிற 6-ந் தேதி ஒட்டுமொத்த தமிழ்நாடே அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று முடிவு செய்துவிட்டார்கள். தி.மு.க. வெற்றி பெறும்போது தான் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை உடனடியாக கொண்டுவர முடியும்.தேவேந்திர குலவேளாளர் பேரமைப்பினர் கோரிக்கையை கழகத்தலைவரிடம் தெரிவித்து திருச்சி மாநகரில் இமானுவேல் சேகரனார் திருவுருவச்சிலை அமைக்கப்படும். அவரது நிைனவுநாள், பிறந்தநாளை அரசுவிழாவாக தி.மு.க. நடத்தும் என்று வாக்குறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
மாநகர பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா காலத்தில் நமக்கு ஏற்பட்ட இழப்பை முன்னிட்டு கலைஞர் பிறந்த நாளன்று ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். நல்ல திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை வந்து சேர வேண்டும் என்றால் நீங்கள் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தி.மு.க.வை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, திருவெறும்பூரை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுங்கள் என்றார்.
அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர் குண்டூர் மாரியப்பன், நவல்பட்டு சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள், தோழமை கட்சி தோழர்கள் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story