துறையூர் நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி தீவிர பிரசாரம்
துறையூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் இந்திரா காந்தி துறையூரை சுற்றியுள்ள கிராமங்களில் முதல் கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தற்போது துறையூரில் உள்ள நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மேட்டுத் தெரு, பாரதி அரங்கம், ஆத்தூர் ரோடு, தெப்பக்குளம், வடக்குத்தெரு, கீழ கடைவீதி, கட்டபொம்மன் தெரு, சிக்க பிள்ளையார் கோவில் தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, பண்டரிநாதன் தெரு, குட்டகரை, குட்ட கரைமேடு, காமராஜர் நகர் எக்ஸ்டென்ஷன், பாலக்கரை, கடைவீதி, முத்தையா காலனி, ஆஸ்பத்திரி ரோடு, புது காட்டு தெரு, விநாயகர் தெரு, சொரத்தூர் ரோடு, நெசவாளர் காலனி, உள்பட துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கி ஆரத்தி எடுத்து பரிவட்டம் கட்டி பெண்கள் வரவேற்றார்கள். இதையடுத்து ஆண் தொண்டர்களில் ஒருவர் ஆராத்தி எடுத்து வரவேற்றார்.
அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் இந்திரா காந்தி பேசியதாவது:-
நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம். ஜெயலலிதாவின் ஆசியால்நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த நல்லாட்சி தொடர உங்களால்தான் முடியும். மக்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையாக பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையிலும், கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், ஏழை எளிய மக்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உள்ளார்கள். அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரவும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 2011-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அப்போது துறையூர் நகரின் ரூ.7 கோடிக்கு மேல் பல்வேறு இடங்களில் தார்சாலை வசதி செய்து கொடுத்து உள்ளேன். அதே போன்று துறையூர் நகராட்சி வளாகம் புதியதாக கட்டிக்கொடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசிடமிருந்து பெற்று செயல்படுத்தி உள்ளேன். அதேபோன்று மீண்டும் உங்களுக்கு உதவிட எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். துறையூர் நகரை
வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறேன். அதற்கு நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி அடைய செய்யுங்கள் என்று பேசினார்.
அப்போது துறையூர் நகர செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் சேனை செல்வம், வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் மனோகரன், தொழில்நுட்ப மாவட்ட இணை செயலாளர் முத்துக்குமார், தொழில் நுட்ப அணி தெற்கு ஒன்றிய செயலாளர் கவிக்குமார் உள்பட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story